Tuesday, August 24, 2004

எறும்பிலிருந்து யானைக்கு


இன்று தொட்டுத் தொடர்கிறது என் பயணம். அன்புடை நெஞ்சங்கள் வந்து தாமே கலக்கும் என்றறிகிறேன். மரத்தடிக்குழுமத்தில் நான் உள்ளிட்ட இரண்டு மடல்கள் இருக்கின்றன. முதல் மடல் அறிமுக மடல். இரண்டாம் மடல் போட்டிக் கவிதை. ஒரு மடல் எழுதிவிட்டால் இரண்டாம் மடலில் எழுத்தாளனாகவேண்டும் என்பதே மரபென அறிந்து ஆற்றுவழியோடும் இலைபோல் அவ்வாறானேன். என் ஊர் நெல்லை அருகிலுள்ள வீரவநல்லூர் கிராமம், என் பெயர் ஜிஷ்ணு என்றறிந்தால் போதுமானது. மற்ற விலாசம் என்ன செய்துவிடப்போகிறது?

இந்த வலைப்பதிவை உருவாக்கும் போதிய அறிவு எனக்கிருக்கவில்லை. மிகுந்த பிரயாசைப்பட்டுக் கொஞ்சம் கொஞ்சமாக உருவாக்கினேன். இப்போது இதன் தோற்றம் கொஞ்சம் பரவாயில்லை என்று தோன்றுகிறது. ஆரம்பத்தில் நீரில்லாமல் வற்றிப்போய்க் கிடக்கும் எங்கள் ஊர்க்குளம் மாதிரி இருந்தது.

எனக்குக் புதுக்கவிதை எழுத விருப்பமுண்டு. அவ்வப்போது எழுதிப்பார்ப்பதுண்டு. அடிக்கடி எழுதும் தெம்பில்லை. மிகுந்த பிரயாசைப்பட்டால் மாதத்திற்கு ஒரு கவிதை எழுதவரும். நாள்களுக்கு நான்கு கவிதைகள் எழுதிடும் யானைகளுக்கு மத்தியில் ஒரு சிற்றெரும்பாய்த் தொடங்கும்போது எனக்கே என் மேல் சிரிப்பும் அனுதாபமும் கவிகிறது. ஆனாலும் எழுதத்தான் போகிறேன். "கழுதை தேய்ந்து கட்டறும்பான" உலகில் "எறும்பு நான் தேய்ந்து தேய்ந்தே யானையாகப்" போகிறேன்.

வணக்க மடல் தற்பெருமை பேசாவிட்டால் அதற்கு மதிப்பில்லை என்று எனக்குச் சொல்லப்பட்ட காரணத்தால் இப்படிப் பேசவேண்டியதாகிவிட்டது.

தமிழ்த்தட்டச்சுக்கு உதவிடும் அனைத்து எழுத்துருச் செயலிகள் உருவாக்கியவர்களுக்கும் வலைப்பதிவாளர்களுக்கும் சுரதாவின் மாற்றிகளுக்கு ஒரு கும்பிடு போட்டுக்கொண்டு ஊற ஆரம்பிக்கிறேன்.



3 comments:

Mookku Sundar said...

அடடே..புது முகமூடியா...வரணும் ..வரணும்.

மகிஷாசுரமர்த்தினி படிக்கும்போது ஜிஷ்னு ன்னு படிச்ச ஞாபகம்.

கலக்குங்க...எழுத்துக்கு புதுசு இல்லங்கிறது மட்டும் இப்போதைக்கு தெரியுது. பாப்பம்.

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

vaanga Jishnu

நெல்லை ஜிஷ்ணு @ ஹரன் பிரசன்னா said...

Dear all, I am not a mask, I dont want to say just my real name, because its of no use. Read my writings and share your comments if any. Regards.